மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, செப். 5: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தேவியானந்தல் மற்றும் ஈஸ்வரகண்டநல்லூர் கிராமங்களில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த மணிகண்டன்(21), வீரப்பன்(58) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: