6 அரசு பள்ளிகளில் பராமரிப்பு இன்றி காட்சி பொருளாக இருக்கும் குடிநீர் இயந்திரம்

உளுந்தூர்பேட்டை, செப். 5: உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 3 வருடத்திற்கு முன்னர் மாணவர்களின் நலன்கருதி உளுந்தாண்டார்கோயில், பெரியக் குறுக்கை உள்ளிட்ட 6 கிராமங்களில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் ரூ 2 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த இயந்திரம் வைக்கப்பட்டு 3 மாதங்கள் மட்டுமே மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் பிறகு இதுவரையில் அந்த இயந்திரங்கள் இயங்காமல் 6 பள்ளிகளிலும் காட்சி பொருளாகவே உள்ளதாக தெரிகிறது.

Advertising
Advertising

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன்கருதி வைக்கப்பட்ட இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் பழுதாகி உள்ளது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் இயந்திரம் பராமரிப்பு பொறியாளர்களிடம் தெரிவித்தும், அவர்கள் வந்து அதனை சரி செய்யவில்லை, இதனால் 6 பள்ளிகளிலும் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வீணாகி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து 6 அரசு பள்ளிகளிலும் காட்சி பொருளாக உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை சீரமைத்து மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: