மழை இல்லாததால் விவசாயிகள் வேதனை

பெண்ணாடம், செப். 5: பெண்ணாடம், திட்டக்குடி, ராமநத்தம் பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாவிட்டாலும், மழைக்கு ஏற்றவாறு விவசாயிகள் பயிர்களை விதைத்து வருகின்றனர். ஆவணி முதல் நாள் பெய்த 2 மணிநேரம் மழையை வைத்து மீண்டும் மழைவரும் என நம்பிக்கையில் விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம், கேழ்வரகு போன்ற பயிர் வைத்து விவசாயம் செய்து வந்தனர்.ஆனால் இன்று வரை பெண்ணாடம், திட்டக்குடி, ராமநத்தம் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் விதைத்த பயிர்கள் அனைத்தும் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இருப்பினும் விவசாயத்தை விட்டு கொடுக்காமல், மழை வரும் என்ற நம்பிக்கையுடன் மேலும் செலவு செய்து விதைத்த பயிர்களில் களை எடுப்பதும், மருந்து அடிப்பதுமாக இருந்து வருகின்றனர்.

Tags :
× RELATED சாலை ஆக்கிரமிப்புகளால் பண்ருட்டி நகரில் கடும் போக்குவரத்து ெநரிசல்