சீரமைக்க கல்வியாளர்கள் கோரிக்கை மண்வளம் மேம்பட பசுந்தாளுர பயிரான சணப்பு பயிரிட ஆலோசனை

புதுக்கோட்டை, செப்.5: மண்வளம் மேம்பட பசுந்தாளுர பயிரான சணப்பு பயிர் சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டுமென வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்காங்கே இடைவெளி விடாது தொடர்ந்து நிலத்தில் பயிர்கள் சாகுபடி செய்து வருவதால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள சத்துக்கள் குறைந்து வளமற்ற தன்மையை அடைவதுடன் மண்ணின் பவுதீக மற்றும் ரசாயன அமைப்பில் சிதைவுகள் (மாற்றங்கள்) ஏற்பட்டு காலப்போக்கில் சாகுபடிக்கு பயனற்ற நிலமாக மாறுகிறது. எனவே மண்ணின் வளம் குன்றாமல் இருக்க தொடர்ந்து ஒரே வகை பயிரை சாகுபடி செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற மாற்று பயிரை சாகுபடி செய்து பயிர் சுழற்சி முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தற்சமயம் பேராவூரணி வட்டாரத்தில் குறுவை சாகுபடி செய்யப்படும் இடங்கள் போக மீதியுள்ள ஒருபோக சம்பா சாகுபடி செய்யப்படும் இடங்கள் பெரும்பாலும் தரிசாகவே உள்ளது. அதுபோன்ற இடங்களிலும், பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் குறைவு உண்டாகக்கூடிய களர்- உவர் நிலங்களிலும், தென்னை சாகுபடி செய்துள்ள தோப்புகளிலும் பசுந்தாளுர பயிரான சணப்பு பயிரிடுவதற்கு இப்பருவமே ஏற்ற தருணமாகும்.தற்சமயம் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இம்மழையின் ஈரத்தை பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு தேவையான 16- 20 கிலோ சணப்பு விதையை விதைப்பு செய்து அவை வளர்ச்சியடைந்து சரியாக 45வது நாளில் பூத்து குலுங்கி நிற்கும்போது டிராக்டர் கொண்டு மடக்கி உழுது மக்க செய்ய வேண்டும். இதனால் சீர்கெட்டு கிடக்கும் நிலம் இயற்கை வளம் நிறைந்த நிலமாக மாறும். மண்ணில் காற்றோட்டம் சீராக இருக்கும். அங்கக உயிரினங்களின் பெருக்கம் அதிகரிக்க செய்யும். மண்ணின் பவுதீக மற்றும் ரசாயன மாற்றங்கள் நிலை நிறுத்தப்படும். மண்ணில் நீர்பிடிப்பு தன்மை அதிகரிக்க செய்ய பெற்று நீண்ட நாட்கள் ஈரத்தன்மை காக்கப்படும். எனவே நெல் நடவு சாகுபடி செய்ய தயாராகும் அனைத்து விவசாயிகளும் இப்பருவத்தில் பசுந்தாள் உரப்பயிரான சணப்பு பயிரிட்டு பயன்பெறலாம்.இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழையின் ஈரத்தை பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு தேவையான 16- 20 கிலோ சணப்பு விதையை விதைப்பு செய்து அவை வளர்ச்சியடைந்து சரியாக 45வது நாளில் பூத்து குலுங்கி நிற்கும்போது டிராக்டர் கொண்டு மடக்கி உழுது மக்க செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் வேலை, நிதி உதவி வழங்க வேண்டும்தமிழகத்தில் 1990ம் ஆண்டு பல்வேறு துறைகளில் கபடி வீரர்களுக்கு அரசு வேலைவாப்பு வழங்கியது. இதனால் அந்த கால கட்டத்தில் அதிக அளவில் கபடி விளையாட்டில் ஆர்வமாக விளையாடி வந்தனர். இதனால் கபடி போட்டியை ஊக்குவித்து வளர்தெடுக்கும் விதமாக கபடி வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த வேலைவாயப்பும், நிதி உதவியும் அளிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட வீரர்கள்  தங்களை முழுமையாக கபடி போட்டியில் ஈடுபடுத்திக்கொண்டால் மட்டுமே தஞ்சையை சேர்ந்த சேரலாதன்போல்  தேசியஅளவிலான போட்டியில் இடம் பெற முடியும் என்று தன்ராஜ் மேலும் தெரிவித்தார்.  இளைஞர்களிடம் விழிப்புணர்வைஏற்படுத்த வேண்டும்நூலகத்தின் முக்கியத்துவத்தை இன்றைய இளைஞர்களிடம் எடுத்து சொல்லி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகப்படியான இளைஞர்களை புத்தகம் படிக்கதூண்ட வேண்டும். நூலகத்தில் அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். குறிப்பாக போட்டி தேர்வுக்கு படிக்கும் போது அதில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு இணைய வசதியை ஏற்படுத்த வேண்டும். நூலகர்களுக்கு ஊதியத்தைஅதிகரிக்க வேண்டும்தற்போது நூகர்களுக்கு அரசு மாதந்தோறும்  ரூ.900 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தை வைத்துகொண்டு அவர் தினசரி நூலகத்தை திறந்து பராமரிக்க முடியாது. இதனால் அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து நூலகர்களுக்கு குறிப்பிட்ட அளவில் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அப்போதுதான் நூலகம் சிறப்பாக செயல்படும்.


Tags :
× RELATED ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு...