கந்தர்வகோட்டையில் மழை

கந்தர்வகோட்டை, செப்.5: புதுக்கோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெயில் மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று கந்தர்வகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பிற்பகலில் மழை பெய்யும் தருவாயில் மேகம் திரண்டிருந்தது. பின்னர் மாலை நேரத்தில் மழை பெய்ய துவங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வெப்பக்காற்று நீங்கி குளிர்ந்த காற்று வீச துவங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags :
× RELATED ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு...