சடையம்பட்டி அரசு பள்ளியில் உடல்நலம் பேணிக்காத்தல் முகாம்

பொன்னமராவதி, செப்.5: பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடல்நலம் பேணிக்காத்தல் முகாம் நடந்தது. மகளிர் விடியல் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த முகாமிற்கு தலைமையாசிரியர் குமார் தலைமை வகித்தார்.
லில்லிஅல்போன்ஸ், செல்வி ஆகியோர் பாலியல் கல்வி, மற்றும் உடல் நலம் பேணுதல் பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.அறந்தாங்கியில் அறிவியல் கருத்தரங்கம்அறந்தாங்கி, செப்.5: அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கருத்தரங்கம் “தனிமங்களின் ஆவர்த்த அட்டவணை-மனிதன் நலன் மீதான தாக்கங்கள்” என்ற தலைப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்நடைபெற்றது. இக்கருத்தரங்கில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 43 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் கருத்தரங்கை துவங்கி வைத்தார். பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். பள்ளித் துணை ஆய்வாளர் செல்வம் அனைவரையும் வரவேற்றார்.

நடுவர்களாக அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜெயலெட்சுமி, சிலட்டூர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கோவிந்தராஜன், அறந்தாங்கி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரண்யா ஆகியோர் பணியாற்றினர். கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் ஜெகதாப்பட்டினம் உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி யாழினி முதலிடத்தையும், பூவைமாநகர் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி மதி இரண்டாமிடத்தையும் பெற்று மாவட்ட அளவிலான கருத்தரங்கிற்கு தேர்வாகியுள்ளனர்.

Tags :
× RELATED திருமயம் பஸ் ஸ்டாண்டில் தவறவிட்ட 15 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு