ஆரணியில் வீட்டுமனை தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் சகோதரர்கள் கைது

ஆரணி, செப்.5: ஆரணி வீராசாமி தெருவை சேர்ந்தவர் அசோக்குமார்(35). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் காலி வீட்டுமனை உள்ளது. இந்த வீட்டுமனை தொடர்பாக அசோக்குமாருக்கும், ஆரணி பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(43), அவரது தம்பி ஆறுமுகம்(38) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் அசோக்குமார், காலிமனையில் புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதையறிந்த விஜயகுமார், ஆறுமுகம் ஆகியோர் நேற்று முன்தினம் அங்கு சென்று, அவரிடம் தகராறு செய்து சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வழக்குப்பதிந்து விஜயகுமார், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து, ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தார்.

Tags :
× RELATED பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண்...