திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 14 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது சென்னையில் இன்று வழங்கப்படுகிறது

திருவண்ணாமலை, செப்.5: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 14 ஆசிரியர்களுக்கு, சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.சிறப்பாக பணிபுரியும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சிறப்பான பணியை பாராட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருதை மத்திய, மாநில அரசுகள் வழங்கி கவுரவிக்கிறது.அதன்படி, மாநில அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 9 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் உட்பட 14 பேர் மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற உள்ளனர்.நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் விபரம்:எம்.உமாமகேஸ்வரி, தலைமை ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு. எம்.மணிமேகலை, தலைமை ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரிய கொழப்பலூர். சு.சண்முகம், உடற்கல்வி இயக்குநர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி.வி.ரூபன் ஜெபானந்தன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, இனாம்காரியந்தல். பெ.ராமு, கணினி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செய்யாறு. மோ.தேவாசீர்வாதம், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி. நாறையூர். தொ.வேடியப்பன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வானாபுரம். இரா.சரவணன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பழைய மண்ணை.

வ.சங்கர், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தேவிகாபுரம். வே.திருமால், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாளைய ஏகாம்பரநல்லூர். த.புருஷோத்தமன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எம்ஜிஆர் நகர், பையூர். ம.ஆறுமுகம், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தளவாய்நாயக்கன்பேட்டை. அ.ஜோதிசிவக்குமார், முதுகலை ஆசிரியர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வெண்மணி. கி.பாண்டியன், இசை ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, போளூர்.இந்நிலையில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறும் ஆசிரியர் தின விழாவில், விருதுகள் வழங்கப்பட உள்ளது.


Tags :
× RELATED பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண்...