அனைத்து வியாபாரிகள், கட்சியினர் தீர்மானம் செய்யாறு மாவட்டம் கோரி முதல்வரிடம் நேரில் வலியுறுத்தல்

செய்யாறு, செப்.5: செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்து என அனைத்து வியாபாரிகள், அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.செய்யாறில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்கும்போது, செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும், இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர். இதில், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சியினர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல், செய்யாறில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ேநற்று நடந்தது. வட்டக்கிளை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் குப்புசாமி, மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் 13வது மாவட்ட மாநாடு, செப்டம்பர் 26, 27ம் தேதிகளில் தஞ்சையில் நடைபெறவுள்ள மாநில மாநாடு குறித்து ேபசினார்.தொடர்ந்து, கூட்டத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன் காக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை 2ஆக பிரித்து செய்யாறை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலம் மற்றும் சத்துணவு துறை மற்றும் பல துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண்...