திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கண்காணிப்பாளர், விற்பனையாளரை தாக்கிய வாலிபர் கைது

திருவண்ணாமலை, செப்.5: திருவண்ணாமலை அடுத்த ராஜந்தாங்கல் கிராமத்ைத சேர்ந்தவர் ஆறுமுகம்(42). இவர் அணைக்கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். கடந்த 2ம் தேதி இவர் கடையில் இருந்த போது அங்கு வந்த திருவண்ணாமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த தினேஷ்(30) என்பவர் ஆறுமுகத்திடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினாராம். இதை தடுத்த விற்பனையாளர் பழனியையும் தாக்கினாராம். பின்னர் தினேஷ் பீர்பாட்டலை உடைத்து, கொலை மிரட்டி தப்பியோடினாராம். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து தினேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED தேசிய சாலை பாதுகாப்பு வார விழா...