வாணியம்பாடியில் மீண்டும் துணிகரம் ஷூ கம்பெனி மேலாளர் வீட்டில் 50 சவரன், வெள்ளி திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

வாணியம்பாடி, செப்.5: வாணியம்பாடியில் வீட்டின் பூட்டு உடைத்து 50 சவரன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் கவுசிக்(40), தனியார் தோல் தொழிற்சாலை மேலாளர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை சென்றிருந்தார். நேற்று காலை சென்னையில் இருந்து திரும்பிய அவர், நேராக தொழிற்சாலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இவரது வீட்டு வேலைக்காரப்பெண் கவுசிக் வேலைக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உடைத்து திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, யாரும் இல்லாத நிலையில், பொருட்கள் சிதறிக்கிடந்ததை பார்த்தார். உடனடியாக அங்குள்ள கவுசிக்கின் உறவினர்கள் வீட்டுக்கு சென்று தெரிவித்தார்.இதுகுறித்து தகவலறிந்த கவுசிக் உடனடியாக வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, வீட்டில் இருந்த 5 பீரோக்களின் பூட்டு உடைத்து அவற்றில் இருந்த மொத்தம் 50 சவரன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை திருடி சென்றிருந்தது தெரிந்தது.

சம்பவ இடத்தை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். மேலும் இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.பாக்ஸ் ...சாக்லேட், பாதாம் ஜூஸ் ருசித்த கொள்ளையர்கள்திருட்டு நடந்த வீட்டில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த சாக்லெட்டுகள், பாதாம் ஜூஸ், முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை ஷோபாவில் அமர்ந்து திருடர்கள் சாப்பிட்டுள்ளனர். மேலும், திருட்டு நடந்த இந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சென்னாம்பேட்டையில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் திருட்டு சம்பவம் நடந்தது. அங்கு சென்ற கொள்ளையர்கள் சமைத்து சாப்பிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: