வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் மாவோயிஸ்ட் கேரள கோர்ட்டில் ஆஜர்

வேலூர், செப்.4: வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் மாவோயிஸ்டை கேரள கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நேற்று அழைத்து சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தங்கியிருந்த பெண் மாவோயிஸ்ட் ரீனா ஜாய்ஸ் மேரியை கியூ பிரிவு போலீசார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். அப்போது கொடைக்கானலில் உள்ளவர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் ரீனா ஜாய்ஸ் மேரிக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் அவரை கைது செய்து, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர். இவர் மீது கேரளா, தமிழகம் ஆகிய 2 மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Advertising
Advertising

இதற்கிடையே ரீனா ஜாய்ஸ் மேரி மீதான வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜர்படுத்த, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள ரீனா ஜாய்ஸ் மேரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் மற்றொரு வழக்கு விசாரணைக்காக மாவோயிஸ்ட் ரீனா ஜாய்ஸ் மேரியை ேகரள கோர்ட்டில் ஆஜர்படுத்த வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நேற்று அழைத்து சென்றதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: