பெரணமல்லூர் அருகே பைக்குகள் மோதி மெக்கானிக் பலி : 3 பேர் படுகாயம்

பெரணமல்லூர், செப்.4: பெரணமல்லூர் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஏசி மெக்கானிக் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். பெரணமல்லூர் அடுத்த சஞ்சீவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் நவீன்குமார்(22), ஏசி மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்தவர் தினகரன்(25). நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு வந்தவாசிக்கு பைக்கில் சென்றனர். ஆரணி- வந்தவாசி சாலையில் பில்லாந்தி கூட்ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக், நவீன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தினகரன், மற்றொரு பைக்கில் வந்த வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பத்தை சேர்ந்த கோபிநாத்(30), பாலாஜி(23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நவீன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண்...