தண்டராம்பட்டு அருகே பரபரப்பு காஸ் கசிவால் கார் தீப்பற்றி எரிந்தது : 3 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

தண்டராம்பட்டு, செப்.4: தண்டராம்பட்டு அருகே காஸ் கசிவால் கார் தீப்பற்றி எரிந்தது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). இவர் நேற்று மதியம் தனது நண்பர் சங்கர்(33) மற்றும் டிரைவர் சென்னன்(27) என்பருடன் காருக்கு காஸ் பிடிப்பதற்காக திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தார்.
தண்டராம்பட்டு அடுத்த வண்டிமேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரில் இருந்து புகை வெளியேறியது. இதையறிந்த சென்னன் காரை சாலையோரமாக நிறுத்தி சரிசெய்தார். பின்னர், 3 பேரும் காரில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

ராதாபுரம் அருகே சென்றபோது காஸ் கசிவு ஏற்பட்டு, காரில் இருந்து மீண்டும் புகை வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த 3 பேரும், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக வெளியேறினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தண்டராம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண்...