கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஆக. 22: கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அஞ்சல் ஊழியர் மகாசம்மேளனம் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் மருதநாயகம் தலைமை வகித்தார். கோட்ட தலைவர் குணசேகரன், கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அஞ்சல் துறையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும். சிஎஸ்ஐ, ஐபிபி வங்கி பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு கமலேஷ்சந்திரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: