வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேக்கம் சாலை மறியலுக்கு வந்த மக்கள் மாநகராட்சி அதிகாரிகளை

பரபரப்புதிருச்சி, ஆக. 22: திருச்சி விமான நிலையம் அருகே உள்ள செம்பட்டு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 19ம் தேதி பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் இரவில் குழந்தைகளுடன் தூங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். முறையான வடிகால் வசதி இல்லாததால், தேங்கிய மழைநீர் வடியாமல் இருந்தது.இதனால் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரியும், மழைநீரை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செம்பட்டு பகுதி மக்கள் மற்றும் எஸ்டிபிஐ அமைப்பு சார்பில் நேற்று (21ம் தேதி) சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதன்படி ஏராளமானோர் மறியல் செய்ய மெயின் ரோட்டுக்கு கிளம்பி வந்தனர்.இதையடுத்து பொன்மலை உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்காத பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து மாநகராட்சி உதவி ஆணையர் தயாநிதி, இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது ஆத்திரத்தில் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து மழைநீரை அகற்றவும், வடிகால் கட்டவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன்பின் வீடுகள் முன் தேங்கி இருந்த மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.
Advertising
Advertising

Related Stories: