×

சிங்கப்பூர் விமானங்கள் தாமதம் பயணிகள் அவதி

ஏர்போர்ட், ஆக.22: சிங்கப்பூரில் இருந்து தினந்தோறும் மாலை 3 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். மீண்டும் மாலை 4.10 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில் நேற்று மாலை இரண்டரை மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து 6.30 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. இதே போன்று திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானமானது தினம் தோறும் மாலை 4 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து 6.40 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் செல்லும் இந்த விமானம் திருச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்து திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 3 மணி நேரம் தாமதமாக இரவு 9.45 சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் சென்றது. தொழில்நுட்ப காரணங்களால் தாமதமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Tags :
× RELATED அதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால்...