உயரழுத்த மின்சாரத்தால் பிரிட்ஜ் வெடித்து ரயில்வே ஊழியர் காயம்

திருச்சி, ஆக. 22: பொன்மலையில் உயர் அழுத்த மின்சாரத்தால் பிரிட்ஜ் வெடித்ததில் ரயில்வே ஊழியர் காயமடைந்தார். திருச்சியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மின்சாரம் தடைப்பட்டு மீண்டும் உயரழுத்த மின்சாரமாக வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் வெடித்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில், திருச்சி பொன்மலை பழைய டீசல் காலனியை சேர்ந்த ரயில்வே ஊழியர் பாரதி(40) என்பவரின் வீட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட உயர்மின் அழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியது. மேலும் அருகிலிருந்த டிவி உள்ளிட்ட மின்சாதனங்களும் கருகியது. இதில் பாரதி லேசான காயமடைந்தார். இதையடுத்து அவர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags :
× RELATED மணப்பாறை அருகே மின் கசிவால் சோள தட்டைகள் எரிந்து நாசம்