மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் துவக்கம்

திருச்சி, ஆக.22: திருச்சி மாநகராட்சி ரங்கம் கோட்டம் 9வது வார்டு கருர் பைபாஸ் ரோட்டில் கோட்டை வாய்க்கால் 500 மீ. நிளத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பொறியாளர்களுடன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆணையர் ரவிச்சந்திரன், ‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்லும் அனைத்து மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணியும் மற்றும் இயந்திரம் மூலம் தூர்வார இயலாத சில வாய்க்கால்களில் மனித ஆற்றல் மூலம் தூர் வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தூர்வாரும் பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்திற்குள் முடிக்கப்படும்’ என்றார்.

Tags :
× RELATED தெப்பத்திருவிழா 27ல் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்