திருச்சியில் 24ம் தேதி தடயவியல் துறையில் இளம் அறிவியல் அதிகாரி தேர்வு 1,260 பேர் எழுதுகின்றனர்

திருச்சி, ஆக.22: திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தடயவியல் அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அதிகாரி (ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் இன் போரன்சிக் சயின்ஸ்) பதவிக்கான போட்டி தேர்வு வரும் 24ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 10 முதல் 1 வரை, மதியம் 2.30 முதல் 4.30 மணி வரை தேர்வுகள் நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் ஜெ.ஜெ பொறியில் தொழில்நுட்ப கல்லூரியில் 1,260 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்விற்கு இரண்டு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 1 இயங்குக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் அனுமதி இல்லை.


Tags :
× RELATED மேலும் ஒரு கொலையிலும் தொடர்பு அம்பலம்...