திருச்சியில் இளம்பெண் மாயம்

திருச்சி, ஆக. 22: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மனைவி கல்பனா (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கல்பனா நேற்று முன்தினம் காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க சென்றார். ஆனால் அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் கல்பனா பற்றி எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாய் கவிதா காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிந்து மாயமான கல்பனாவை தேடி வருகிறார்.

Tags :
× RELATED கிருஷ்ணசாமி அறிவுறுத்தல் குடிநீர்...