மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள்

திருவில்லிபுத்தூர், ஆக.22: மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவேங்கடத்தில் உள்ள கீழத்தெரு காலனியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சந்திரமோகன், கடந்த 2010 அக்.7ல் பெருமாளை வெட்டிப் படுகொலை செய்தார். பெருமாள் மனைவி பொன்னுத்தாய் புகாரின்பேரில், மாரனேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கு, திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா, ‘பெருமாளைக் கொன்ற சந்திரமோகனுக்கு  ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அதை கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என தீர்ப்பளித்தார்.

Tags :
× RELATED நாட்டுநலப்பணி சிறப்பு முகாம்