×

30 ஆண்டு பிரச்னைக்கு முடிவு எப்போது? விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் குளிர்ந்த பூமி புழுக்கத்தில் தவித்த மக்கள் மகிழ்ச்சி

விருதுநகர், ஆக.22: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சியால் பெய்து வரும் மழையால் விருதுநகர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் ஜன.முதல் பெய்ய வேண்டிய மழை பொய்த்து வரும் நிலையில் நகராட்சிகள், ஊராட்சிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. 8 அணைகள், 1024 கண்மாய்கள் வறண்டு கிடக்கும் நிலையில், மழை பெய்தால் மட்டுமே நிலைமையை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. விவசாயிகளும் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து உழவு பணிகளை துவக்கி வருகின்றனர். ஜனவரி முதல் ஆக வரை பெய்ய வேண்டிய 312.60 மி.மீக்கு இதுவரை 227.85 மி.மீ மழை மட்டும் பதிவாகி உள்ளது. செப்.மாதம் 87.5 மி.மீ மழையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்.முதல் டிச. வரை 419 மி.மீ மழையை நம்பியே குடிநீரும், விவசாயமும் உள்ளது.

மழையை எதிர்பார்த்து மக்களும், ஆட்சியாளர்களும் இருக்கிற நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்தது. தொடர் சாரல் மழையும், விட்டுவிட்டு நல்ல மழையும் பெய்தது. இதனால், பூமி குளிர்ந்து புழுக்கத்தில் தவித்த மக்கள் மகிழ்ச்சி
அடைந்தனர்.

Tags :
× RELATED பணம் திருடியவர் கைது