5 மையங்களில் 14,587 பேர் எழுத ஏற்பாடு சிவகாசி டூ சென்னை 4 அதிநவீன சொகுசு பஸ்கள் இயக்கம்

சிவகாசி, ஆக. 22: அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிவகாசியில் இருந்து சென்னைக்கு 4 புதிய சொகுசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களின் சேவையை சிவகாசி பஸ்நிலையத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சென்னைக்கு சொகுசாக சென்று வருவதற்கு, 4 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், ‘சிவகாசியிலிருந்து சென்னை வழித்தடத்திற்கு ஒரு அதிநவீன குளிர் சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதியுள்ள சொகுசு அரசு பஸ்சும், ஒரு குளிர் சாதன இருக்கை வசதியுள்ள சொகுசு அரசு பஸ்சும், இதேபோல சென்னையிலிருந்து சிவகாசி வழித்தடத்திற்கு 2 சொகுசு பஸ்கள் என 4 சொகுசு பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.  நிகழ்ச்சியில் கலெக்டர் சிவஞானம், சந்திரபிரபா எம்எல்ஏ, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (மதுரை) உதவி மேலாளர் தவமணி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு