பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி ஆக.23 மற்றும் 28ம் தேதிகளில் ராமநாதபுரம் எம்பி குறை கேட்பு நிகழ்ச்சி

காரியாபட்டி, ஆக.22: விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி, நாளை (ஆக. 23) மற்றும் 28ம் தேதி நன்றி அறிவிப்பு மற்றும் பொதுமக்களின் குறை கேட்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இதனடிப்படையில் நாளை காலை பரளச்சி, எம்.ரெட்டியபட்டி, கல்லூரணி, தமிழ்பாடி, ஆலடிபட்டி ஆகிய ஊர்களிலும், மாலையில் இலுப்பையூர், இருஞ்சிறை, கட்டனூர், சாலை இலுப்பைக்குளம், நரிக்குடி ஆகிய ஊராட்சிகளிலும், இதேபோல 28ம் தேதி காலை முடுக்கன்குளம், எஸ்.மரைக்குளம்,  அழகாபுரி, அ.முக்குளம், புல்வாய்க்கரையும், மாலையில் ஆவியூர், முஷ்டக்குறிச்சி, பெ.புதுப்பட்டி, கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் குறை கேட்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மாநில சைக்கிள் போட்டியில் திருவில்லி.மாணவர்கள் வெற்றி