வாகன போக்குவரத்தில் சிரமம் வீட்டை உடைத்து நகை திருட்டு

சின்னமனூர், ஆக. 22: சின்னமனூர் அருகே வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் உள்ள பஞ்சாங்கம் தெருவைச் சேர்ந்த விவசாயி பாண்டி. இவர் நேற்று முன்திநம் காலையில் இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். மாலையில் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ மாயன் வழக்குப்பதிந்து, கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு கதராடை தயாரிப்பு குறித்த செயல் விளக்கம்