கஞ்சா விற்ற தாய், மகன் உட்பட 3 பேர் கைது

கம்பம், ஆக. 22: கம்பம் பகுதியில் கஞ்சா விற்ற தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கம்பம் காட்டு பள்ளிவாசல் ரோடு 18ம் கால்வாய் பகுதியில் வடக்கு போலீஸ் எஸ்ஐ வினோத்ராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுதாகர் (33), அதே பகுதியைச் சேர்ந்த ஜெயா (50), இவரது மகன் ஜெயன்குமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட கஞ்சா ரூ.30 ஆயிரம் மதிப்புள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Tags :
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு கதராடை தயாரிப்பு குறித்த செயல் விளக்கம்