பொதுமக்கள் அச்சம் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து 29ம் தேதி ஆர்ப்பாட்டம்

சின்னமனூர், ஆக. 22: சின்னமனூர் யூஜி தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி, தேனி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். சின்னமனூர் வட்டார தலைவர் மணிகண்டன் வரவேற்றார். நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 2019 புதிய கல்விக்கொள்கையால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கலைந்திடக் கோரி வரும் 29ம் தேதி மாலை தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அளவிலான ஆசிரிய, ஆசிரியர்கள் திரளாக கலந்து கொள்வது, 1999 முதல் 2001 வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் வளர் ஊதியத்திலுள்ள பாதிப்புகளை உரிய திருத்தம் செய்திட அரசை வலியுறுத்துவது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கலெக்டரிடம் சுதந்திர தின விழாவில் பாராட்டு பெற்ற தலைமை ஆசிரியர் பிரபாகரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாநில பொதுக்குழு உறுப்பினர் போடி மோகன், மாநில பொதுக்குழு பெலிஸ் லியோரணி, மாவட்ட பிரதிநிதிகள் பிரபாகரன், சலேத்து, குருபிரசாத், வட்டார செயலாளர்கள் சரவணன், ஜெயராஜ், காமராஜ், முருகேசன் உள்பட பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சின்னமனூர் வட்டார செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பெனடிக்ட் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்