×

ஆசிரியர்களுக்கு புதிய பாட திட்டம் பயிற்சி

சிங்கம்புணரி, ஆக. 22: சிங்கம்புணரி வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார அளவிலான நடுநிலைப் பள்ளி, உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வட்டார மேற்பார்வையாளர் பூபதி வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் பயிற்சி அளிர்த்தார். இதில் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரிய பயிற்றுநர்கள் சேவுகமூர்த்தி, ஆசாத் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED இளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்