சொத்துப்பிரச்னையில் தம்பியை தாக்கிய அண்ணன் குடும்பத்தினர் 3 பேர் கைது

திருப்புத்தூர், ஆக. 22: திருப்புத்தூர் அருகே சொத்துப் பிரச்னையில் தம்பியை தாக்கியதாக அண்ணன் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்புத்தூர் அருகே நெற்குப்பையைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருக்கும், இவரது அண்ணன் பாலசுப்பிரமணியனுக்கும் சொத்துப்பிரச்னை இருந்தது. இந்நிலையில், நேற்று இந்த பிரச்னை சம்மந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சொக்கலிங்கத்தை, அவரது அண்ணன் பாலசுப்பிரமணியன் (53), இவரது மனைவி சித்ரா (44), மகன்கள் பாரதிராஜா (25) மற்றும் பால்ராஜ் ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சொக்கலிங்கம் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து சொக்கலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், நெற்குப்பை காவல்நிலைய எஸ்.ஐ. அசோக்குமார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், சித்ரா, பாரதிராஜா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED காரைக்குடி பகுதியில் போலி பட்டாவில் நில மோசடி மோசடி மன்னர்கள் கைவரிசை