×

நீலகிரி, கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள்

காரைக்குடி, ஆக. 22: காரைக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் பிளஸ் பாயின்ட் நிறுவனம் சார்பில், நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள சட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி துணை ஆளுநர் சக்ரா சீனிவாசன், ரோட்டரி சங்க தலைவர் லியாகத் அலி, செயலாளர் அறிவுடையநம்பி, புதுவயல் ரோட்டரி சங்க தலைவர் அடைக்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.

Tags :
× RELATED இளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்