திருப்புத்தூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு

திருப்புத்தூர், ஆக. 22: திருப்புத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரித்ததாக மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருப்புத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பைச் சேர்ந்தவர் சிவஞானம் மனைவி தமிழரசி. தற்போது மதுரை கே.கே. நகர் ஹவுசிங் போர்டில் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் சுண்ணாம்பிருப்பில் உள்ள தனது 20 சென்ட் புன்செய் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறு பெயருக்கு மாற்றிவிட்டதாக சுண்ணாம்பிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சிகப்பி, கண்ணன், நாகராஜன் ஆகிய 3 பேர் மீது புகார் செய்தார். மாவட்ட நில அபகரிப்பு போலீசார் விசாரணை செய்ததில் போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் மாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திருக்கோஷ்டியூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

Tags :
× RELATED திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கியது