×

நாட்டுக்கோழி திட்டத்திற்கு விண்ணப்பம்

சிவகங்கை, ஆக. 22: சிவகங்கை மாவட்டத்தில் அசில் இன நாட்டுக்கோழி பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆக.25கடைசி நாளாகும். மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: உள்ள ஏழை மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 2019-2020ம் ஆண்டின் கோழி அபிவிருத்தி திட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 6 ஆயிரம் அலகுகள் மற்றும் 12 பேரூராட்சிகளுக்கு ஆயிரத்து 142 என்ற விகிதத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு 7 ஆயிரத்திற்கு 142 அலகுகள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தின்படி, தேர்வு செய்யப்படும், பயனாளிகள் (மகளிர் மட்டும்) 30 சதுரடி இடவசதி உள்ள மிகவும் எளியவராக இருக்க வேண்டும். கைம்பெண், ஆதரவற்றவர், கணவனால் கைவிடப்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு முன்னுரிமையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்கு 30 சதவீத ஒதுக்கீடும் வழங்கப்படும். பயனாளி ஒருவருக்கு விலையில்லா 4 வாரம் வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள் 25 வழங்கப்படும்.

உரிய தகுதியுடன் விருப்பமுள்ள மகளிர் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் உரிய விண்ணப்பங்களை வழங்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.25 ஆகும். கூடுதல் தகவல் அறிய சிவகங்கை கால்நடை பராமரித்துறை உதவி இயக்குநருக்கு 94450 32581 என்ற செல் எண்ணிலும், உதவி இயக்குநர், காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநருக்கு 94450 32556 என்ற செல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்