கலைஞர்களுக்கு விருது

சிவகங்கை, ஆக.22: கலை பண்பாட்டுத் துறை சார்பில் சிவகங்கை மாவட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 2018-2019ம் ஆண்டிற்கான விருதுகள் ஐந்து கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. கலை இளமணி விருது பரதக்கலைஞர் ஜோஷிதாக்கும், கலை வளர்மணி விருது ஓவியக் கலைஞர் ஐஸ்வர்யாவிற்கும், கலைச்சுடர்மணி விருது கிராமிய பாடகர் இளையராஜாவிற்கும், கலை நன்மணி விருது நாடக கலைஞர் ஈஸ்வரனுக்கும், கலை முதுமணி விருது நாதஸ்வரக் கலைஞர் கண்ணையாவிற்கும் வழங்கப்பட்டது. விருது மற்றும் காசோலைகளை கலெக்டர் ஜெயகாந்தன் கலைஞர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண்டல கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் சுந்தர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED நண்பரை கொலை செய்த இருவருக்கு 7ஆண்டு சிறை