×

சாரண சாரணிய மாணவர்களுக்கு புரஸ்கார் விருதுக்கான முகாம்

ராமநாதபுரம், ஆக.22: மண்டபம் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி அளவிலான சாரண சாரணிய மாணவர்களுக்கு மூன்று நாள் ராஜ்யபுரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம், ராமநாதபுரம் நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது. முகாமை மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தாளாளர் முகம்மது யூசுப், மாவட்ட சாரண சாரணிய ஆணையாளர் பரிமளா ஆண்டனி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். மூன்று நாட்கள் நடைபெற்ற சோதனை முகாமை மாநில பயிற்றுநர்கள் எபினேசர், மஞ்சுளா ஆகியோர் நடத்தினர். இரண்டு கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் என 20 பள்ளிகளிலிருந்து ராஜ்யபுரஸ்கார் விருது பெற விண்ணப்பம் செய்த 102 சாரண சாணியர்கள் பங்கேற்றனர்.

சாரண சாரணியர் சீருடை கூடாரம் அமைத்தல், சாரணர் சட்டம், சாரணர் உறுதிமொழி, சாரணர் பாடல்கள் முதலியவற்றில் மாணவர்களின் திறன்களை பற்றி சோதனைகளை மேற்கொண்டனர். முகாமின் இறுதி நாளில் இராஜ்யபுரஸ்கார் விருதுக்கான தேர்வும் நடைபெற்றது. இதில் மண்டபம் கல்வி மாவட்ட சாரண,சாரணியர் இயக்க செயலாளர் மகாலெட்சுமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சாரண சாரணிய மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முகாம் ஏற்பாடுகளை செயலாளர் செல்வராஜ் மற்றும் துணை செயலாளர் ஜெரோம் செய்தனர்.  ஆசிரியர் அருள்ராஜ் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை