×

மண்டபம் கல்வி மாவட்ட அளவில் பெண்களுக்கான தடகள போட்டி

ராமநாதபுரம், ஆக.22:  ராமநாதபுரம் மண்டபம் கல்வி மாவட்டத்தில் பெண்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. ராமநாதபுரம் சேதுபதி சீதக்காதி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தனர். 100, 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டிரிபிள்ஜம்ப், சாட்புட்,  ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 14 வயதினருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் அக்காள் மடம் சென்ட் ஆன்ருஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேவ மரியா ஜோயில், வேர்கோடு சென் ஜோசப் மேல்நிலைப்பள்ளி கீர்த்திகா மேரி, தங்கச்சிமடம் பெண்கள் மேல்நிலை பள்ளி வான்மதி முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 17 வயதினருக்கான 200 மீட்டர் ஓட்டபந்தைய போட்டியில் வேர்கோடு சென்ட் ஜோசப்  மேல்நிலைப்பள்ளி லாவன்யாஸ்ரீ, இரட்டையூரணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உமாபாரதி, தங்கச்சிமடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஜமீல் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதே பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் வேர்கோடு சென்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ராஜேஸ்வரி, அக்காள் மடம் சென்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி பொனிஷ், தங்கச்சி மடம் ஆன்ரூஸ் மேல்நிலைப் பள்ளி சசிகலா முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

19 வயதினருக்கான 100 மீ ஓட்டபந்தயத்தில் இரட்டையூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திவ்யபாரதி, தங்கச்சிமடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  சதீஸ்வரி, பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி கிருஷ்ணவேணி முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதே பிரிவில் 3000 மீட்டர் ஓட்டபந்தயத்தில் பனைக்குளம் பெண்கள் மேல்நிலை பள்ளி சினேகா, மண்டபம் கேம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மீனால், தங்கச்சிமடம் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அபிநயா முதல் மூன்று இடங்களை பிடித்தனர். நீளம் தாண்டுதல் போட்டியில் பனைக்குளம் பெண்கள் மேல்நிலை பள்ளி கிருஷ்ணவேணி, தங்கச்சிமடம் ஹோலிகிராஸ் மேல்நிலைப் பள்ளி பிரியதர்ஷினி மற்றும் சுவானிடோ மேரிஜோ முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை