×

உசிலம்பட்டி 58ம் கால்வாய் திட்டத்தை பொதுக்கணக்குழு ஆய்வு

உசிலம்பட்டி, ஆக.22: உசிலம்பட்டி  58 கிராம கால்வாய் திட்டத்தினை சட்டப்பேரவை பொதுக்கணக்குக்குழு தலைவர் துரைமுருகன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. உசிலம்பட்டி மக்களின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தினை நேற்று சட்டப்பேரவை பொதுக்கணக்குக்குழு பார்வையிட்டது. தலைவர் துரைமுருகன் தலைமையில் குழுஉறுப்பினர்கள் பழனிவேல் தியாகராஜன், பரமசிவம், கீதா, தூசிமோகன் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். மதுரை கலெக்டர் ராஜசேகர் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்விற்கு பின் குழு தலைவர் துரைமுருகன் கூறுகையில், 1996ம் ஆண்டு இந்த 58 கிராம கால்வாயை பார்த்துவிட்டு போனேன். இன்று பிள்ளையைப்போல் வளர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட இத்திட்டம் இப்பகுதி விவசாயிகளுக்காக நல்ல பலனைக்கொடுக்கும். இந்த திட்டம் நிறைவேற காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறினார்.

Tags :
× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு