அதிகாரிகள் அதிர்ச்சி தந்தையுடன் கோபம் கிணற்றில் குதித்த வாலிபர் 2வது நாள் பிணமாக மீட்பு

மேலூர், ஆக. 22: தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் கிணற்றில் குதித்த வாலிபர் உயிரிழந்தார். அவரது உடலை 2வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். மதுரை மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் மகன் அய்யனார்(27). இவர் ஆடுகளை பிரியமாக வளர்த்து வந்துள்ளார். இதை பிடிக்காமல் நடராஜன் மகனை திட்டி உள்ளார். இதனால் கோபமடைந்த அய்யனார் அப்பகுதியில் உள்ள பாரதி என்பவரின் வயல்வெளி கிணற்றில் நேற்று முன்தினம் இரவில் குதித்துள்ளார். தகவலறிந்து மேலூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அய்யனாரின் உடலை இரவில் தேடியும் கிடைக்கவில்லை. இப்பணி நேற்றும் தொடர்ந்தது.  பகலில் அய்யனாரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இச்சம்பவம் குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: