×

மேலூர் அருகே இடியும் அபாயத்தில் மேல்நிலைத்தொட்டி

மேலூர், ஆக. 22: மேலூர் அருகே இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை அகற்றி விட்டு புதிதாக அங்கு மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மேலூர் அருகே சேக்கிபட்டி ஊராட்சியில் வீரசிங்கம்பட்டிக்கு செல்லும் சாலையில் மேல்நிலை தொட்டி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மேல்நிலை தொட்டியில் விரிசல் அதிகமாக காணப்படுகிறது. சேதமான இந்த மேல்நிலை தொட்டியில் இன்றளவும் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆபத்தான இந்த மேல்நிலை தொட்டியை அகற்றி விட்டு, மக்கள் தொகைக்கு ஏற்பட்ட பெரிய அளவிலான மேல்நிலைத்தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சாலையில் கனரக வாகனங்கள் கடக்கும் போது இந்த மேல்நிலை தொட்டி லேசாக ஆடும் நிலைக்கு சென்று விட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த மேல்நிலை தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விடும் அபாய நிலையில் உள்ளது.எனவே, அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து மேல் நடவடிக்கை அகற்றி விட்டு புதிய தொட்டிை அமைக்க என்று கூறினார்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...