எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை

மதுரை, ஆக. 22: மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தை நேற்று இரவு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட சுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டு எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் இருப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் பரவியது. இதனால் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள், காவல்நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்ட குவிந்தனர். போலீசார் சமாதானப்படுத்தி மக்களை கலைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: