அரசு பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

மதுரை, ஆக. 22: மதுரை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் திறனை மேம்படுத்துதல் என்ற முறையில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. இதில் எளிய முறையில் மாணவ, மாணவிகள் பாடங்களை ஞாபகப்படுத்துதல், தன்னிலை அறிந்து கொள்ளுதல், தேர்வின் போது, நேர மேலாண்மை உள்ளிட்ட திறன் குறித்த பயிற்சியை ஜேசிஐ மதுரை சென்டரல் அமைப்பு கொடுத்தது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ஜேசிஐ அமைப்பின் தலைவர் சுடலைமுத்து, உதவி தலைமையாசிரியர் வாசிமலை முன்னிலை வகித்தனர். ஹரிஸ், குமரகுரு, தீபக், முத்துகணேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தனர்.

Advertising
Advertising

Related Stories: