வதிலை கல்லூரி அனுமதிக்கு மனு

வத்தலக்குண்டு, ஆக. 22:  வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் குறைவாகவே மாணவர்கள் உள்ளனர். இவர்கள் 30க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கொண்ட பழைய ஆங்கிலேயர் காலத்து எச் வடிவ 2 மாடி கட்டிடத்தில் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில்

புதிதாக கட்டப்பட்ட 30 வகுப்பறைகள் கொண்ட 3 மாடி கட்டிடமும் உள்ளது. இந்த இரு கட்டிடமும் தனித்தனியே 300 அடி இடைவெளியில் உள்ளது. ஆகையால் ஆங்கிலேயர் கால கட்டிடத்தில் நடக்கும் பள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்றி விட்டு இந்த கட்டிடத்தில் அரசு இருபாலர் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரி அரசு கல்லூரி அமைப்பு கமிட்டி ஏற்படுத்தினர்.

இந்த அமைப்பினர் நேற்று, வத்தலக்குண்டுவில் அரசு இருபாலர் கல்லூரி அமைக்க அரசிடம் அனுமதி பெற்று தர கோரி நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழியிடம் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி அமைப்பு கமிட்டி தலைவர் ராஜா, செயலாளர் கோபால், பொருளாளர் கென்னடி, துணை தலைவர் பால்ராஜ்,  ஒருங்கிணைப்பாளர் சூரியமூர்த்தி, நிர்வாகிகள் மோகன், மருதராஜன், ராஜேந்திரன், வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மனுவை பெற்ற எம்எல்ஏ வத்தலக்குண்டு அரசு ஆண்கள் பள்ளியை நேரில் வந்து ஆய்வு செய்த பின் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறினார்.

Related Stories: