வத்தலக்குண்டுவில் ஹெல்மெட் விழிப்புணர்வு

வத்தலக்குண்டு, ஆக. 22: வத்தலக்குண்டு போலீசார் மற்றும் அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட செயலாளர் அந்தோணி விவேக் தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காளியம்மன் கோயில் அருகே நிறைவடைந்தது. பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த பதாகைகளை டூவீலரில் வைத்தபடி அனைவரும் ஹெல்மெட் அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன், அதிமுக சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ஜான், கார்த்திக், ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட துணை தலைவருமான விஜயராகவன் நன்றி கூறினார். முன்னதாக ரத்ததானம் செய்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: