பழநியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நகராட்சி அதிரடி

பழநி, ஆக. 22: பழநி நகராட்சி சார்பில் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் விற்பனை செய்வதற்காக நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுகின்றன. கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை சாலை வரை நீட்டிப்பு செய்து கொள்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  

Advertising
Advertising

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையில் நேற்று பழநி நகராட்சி சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஜரூராக நடந்தது. முன்னறிவிப்பின்றி நடந்ததால் கடைகளின் முன்புறம் தொங்கவிடப்பட்டிருந்த பொருட்களும் ஆக்கிரமிப்பு அகற்றத்தில் சிக்கின.

சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதிகளில் 300க்கும் மேற்பட்ட கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் எச்சரித்துச சென்றனர்.

Related Stories: