சேரம்பாடியில் நிவாரணம் பொருளை மறைத்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பந்தலூர், ஆக.22: நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழையால்  பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கு தமிழகத்தின் பிறப்பகுதிகளில் இருந்து தன்னார்வ அமைப்புகள் சார்பில் உணவு  பொருட்கள், துணிகள் உள்ளிட்ட  பல்வேறு நிவாரணம் பொருட்கள் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சேரம்பாடி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சேரம்பாடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நிவாரண பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தனது காரில் எடுத்து பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம்  பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் பல்வேறு தரப்பினரும் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஊட்டி-மஞ்சூர் சாலையில் அபாயகர பாறை அகற்றம்