×

காய்கறிகள் அறுவடையில் விவசாயிகள் தீவிரம்

ஊட்டி, ஆக. 22: நீலகிரி மாவட்டத்தில் மழை ஓய்ந்த நிலையில், மீண்டும் மழையில் பாதிக்காமல் இருக்க காய்கறி அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், பூண்டு, பீன்ஸ், பட்டாணி, காலிபிளவர் உட்பட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்படுகிறது. தற்போது கேரட் மற்றும் உருளைக்கிழங்கே அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த காய்கறிகள் அறுவடை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், அறுவடை காலம் நெருங்கிய நிலையில், கடந்த வாரம் மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி விவசாய பயிர்கள் மூழ்கியது. சில இடங்களில் காய்கறிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அவ்வப்போது தெரவித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  மீண்டும் மழை வரும் முன் அறுவடைக்கு தயாரான கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி