தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக. 22:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊழியர்களுக்கு பணிச்சுமை அளிக்கும் நிர்வாகத்தை கண்டித்து அனைத்து அஞ்சலக சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்துவது, ஆட்பற்றாக்குறையை சரி செய்ய போதுமான ஊழியர்களை பணி நியமனம் செய்வது, புதிய பென்சன் திட்டத்தை கைவிடுவது, புதிய தொழில்நுட்பங்களில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், எஸ்.பி, ஆர்.டி, எஸ்.எஸ்.ஏ , ஆர்.பி.எல்.ஐ கணக்குகளுக்கு அதிக இலக்கை நிர்ணயித்து அதை அடைவதற்கு ஊழியர்களுக்கு நெருக்கடி தருவது, விடுமுறை நாட்களில் ஊழியர்களை பணி செய்ய நிர்பந்திப்பது மற்றும் பி.எஸ்.டி அலுவலகங்களை மூடுவதை கண்டித்தும் கோவை கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால்நிலைய வளாகத்தில் அஞ்சலக சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

 தபால்காரர் சங்க தலைவர் கோபால், எழுத்தர் சங்க தலைவர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எம்.எஸ் மண்டல செயலாளர் ராஜேந்திரன், புறநிலைய ஊழியர்கள் சங்கதலைவர் மரிய அந்தோணி ராஜ், தபால்காரர் சங்க உதவி செயலாளர் செந்தில் குமார் , மண்டல செயலாளர் பிரபாகரன் உட்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த தபால் ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories: