பி.எஸ்.ஜி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை, ஆக. 22:கோவையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 1969-ம் ஆண்டில் பட்டம் பெற்ற முன்னாள மாணவர்களின் 50-ம் ஆண்டு பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பொன்விழா குழு தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். கல்லூரி தலைவர் கண்ணப்பன், நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதையடுத்து பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, 1969-ம் ஆண்டு பணியாற்றிய பேராசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் முன்னாள் மாணவர்கள் 85 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கல்லூரி கால நினைவுகளை ஒருவருக்கொருவர் கொண்டனர்.

Advertising
Advertising

கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள், கோவை மாவட்டத்தில் உள்ள செம்மேடு. சின்னார்பதி கிராமங்களை தத்தெடுத்து அங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகளையும், பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஏழை,எளிய மாணவ மாணவிகளுக்கு உதவியும் செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் டாக்டர் கந்தசாமி, பொருளாளர் ரகுபதி, பொன்விழாக்குழு செயலாளர் போத்திராஜ், ஒருங்கிணைப்பாளர் சவுந்திரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொணடனர்.

Related Stories: