×

சி.ஐ.ஐ கருத்தரங்கு

கோவை, ஆக.22: இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ சார்பில் லாஜிஸ்டிக்ஸ் குறித்த ஒருநாள் கருத்தரங்கு கோவையில் நேற்று நடைபெற்றது.
 இந்த கருத்தரங்கில் டி.வி.எஸ் சப்ளை செயின்ஸ் தலைமை செயல் அதிகாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருட்களை தரமான முறையில் ஏற்றுமதி செய்வது குறித்து விளக்கமளித்தார். மேலும், பொருட்களை ஏற்றுமதி அல்லது உள்நாட்டு வணிகத்திற்கு அனுப்பும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை விவரித்தார். இதில் சி.ஐ.ஐ தலைவர் வரதராஜன், மார்க்கெட்டிங் துறை முன்னாள் தலைவர் விஜயகுமார், தொழில்துறையினர் உட்பட 150க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED இருசக்கர வாகன நம்பரை மறைப்பதால்...