சூதாட்ட கிளப்பில் திடீர் சோதனை

கோவை, ஆக.22:கோவை இருகூரில் உள்ள சூதாட்டக் கிளப்பில் மெகா சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.   கோவையில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  சிங்காநல்லூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருகூர்  சின்னியம்பாளையம் பகுதியில் ஒரு கிளப்பில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

Advertising
Advertising

இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இருகூர் பகுதியை சேர்ந்த அசாருதீன்(36),  சுதாகர் (43), விஜயகுமார்(42) சூரியகுமார் (22), ரவிக்குமார் (45),  கோவிந்தராஜன் (24) அப்துல் ரசாக் (30), உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சூதாட்ட கிளப் அதிமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: